மன உளைச்சலில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள என்.எல்.சி குடியிருப்பில் துரைமுருகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் என்.எல்.சி நிறுவனத்தில் நிரந்தரமான தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் துரைமுருகன் ஏற்கனவே நிறுவனத்தில் வாங்கியிருந்த கடன் காரணமாக சம்பளம் குறைவாக வந்ததில் குடும்ப செலவு, இரண்டு மகள்களின் கல்விச் செலவுக்கு போதிய பணம் இல்லாததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சலில் இருந்த துரைமுருகன் திடீரென வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.