Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சாமியை தரிசிக்க சென்ற நிர்வாகி…. மர்ம நபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் அருகாமையில் பாலூர் அய்யன்விளையில் பத்ரேஸ்வரி அம்மன் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவில் வளாகத்தில் 12 சன்னதிகள் இருக்கின்றது. இந்நிலையில் சன்னதிகளில் தினமும் மாலை நேரத்தில் பூஜைகள் நடைபெறுவது வழக்கமாக இருக்கிறது. இதனை அடுத்து காலை நேரத்தில் நிர்வாகி ஒருவர் சாமியை தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்துள்ளார்.

அப்போது கோவில் வளாகத்தில் உள்ள பத்ரேஸ்வரி அம்மன் உள்பட மூன்று சன்னதிகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதன்பின் உள்ளே சென்று பார்த்ததில் அம்மன் சிலைகளில் அணிவிக்கப்பட்டிருந்த கண்கள், நெற்றிப்பொட்டு, தாலி உள்பட 5 பவுன் தங்க நகைகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக கோவில் செயலாளர் சுரேஷ்ராஜ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் கோவிலில் கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |