தண்ணீர் டேங்க் மீது கார் மோதிய விபத்தில் ஆசிரியை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெண்ணாம்பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். இதில் அமராவதிக்கு கார் ஓட்ட தெரியாததால் உறவினர் ஒருவருடன் தினமும் பள்ளிக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் பள்ளி முடிந்த பிறகு அமராவதி காருக்கு அருகில் சென்றுள்ளார். ஆனால் உறவினர் வர தாமதமானதால் அமராவதி பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை வெளியே எடுத்து செல்ல முயற்சி செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக அமராவதி பிரேக்கிற்கு பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்து உள்ளார். இதனால் வேகமாக சென்ற கார் அங்கிருந்த தண்ணீர் டேங்க் மீது பலமாக மோதி நொறுங்கி விட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் இணைந்து படுகாயமடைந்த அமராவதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி அமராவதி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.