வயிற்று வலியால் அவதிப்பட்ட விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள குருக்கபட்டி பகுதியில் விவசாயியான கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கிருஷ்ணன் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து மீண்டும் வயிற்று வலி அதிகமானதால் கிருஷ்ணன் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைத்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அதன் பின் மயங்கிய நிலையில் கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.