Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசு பேருந்து-மோட்டார் சைக்கிள் மோதல்…. விபத்தில் பறிபோன உயிர்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

அரசு பேருந்து மோதி வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கீழகுஞ்சன் விளை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் குலசேகரன்பட்டினம் காவடிபிறை தெருவில் தங்கி கொத்தனாராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பன் சின்னதுரை மகன் வெற்றிவேல் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் ரோட்டில் சென்று கொண்டிருக்கும் போது பின்னால் வந்த அரசுப் பேருந்து மோதியதில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் இரண்டு பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதில் சுரேஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அரசுப்பேருந்து ஓட்டுநரான பாண்டி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |