Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

டிராக்டரில் மணல் கடத்தலா….!! சோதனையில் சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை….!!

மணல் கடத்தலில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள மேலஇலந்தைகுளம் பகுதியில் தேவர்குளம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வந்த டிராக்டரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனை செய்ததில் மணல் கடத்தி வந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.

மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டிரக்டரை ஒட்டி வந்த யாகப்பராஜ் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |