குளத்தில் மூழ்கி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள செல்லாத்தாயார்புரம் அம்மன் கோவில் பகுதியில் பொன்னுதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது நண்பர்களுடன் குளத்திற்கு கண்ணன் குளிக்க சென்றுள்ளார்.
அப்போது கண்ணன் எதிர்பாராவிதமாக தண்ணீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்த நண்பர்கள் அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டு அருகில் இருந்தவர்களை வரவழைத்து கண்ணனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் கண்ணன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.