Categories
சினிமா தமிழ் சினிமா

முருகதாசுக்கு வாய்ப்பு கிடையாது…. விஜய்யின் அதிரடி முடிவு…. காரணம் இதுதான்….!!

முருகதாஸுக்கு வாய்ப்பு கொடுக்கும் எண்ணம் இல்லை என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்கிறார். விஜய்யை வைத்து படம் தயாரிக்க ஆசைப்படும் தயாரிப்பாளர்கள் அவர் எந்த இயக்குனரை காட்டினாலும் அவர்களை வைத்து படம் எடுக்க தயாராக உள்ளனர். இதனிடையே, இவர் தொடர்ந்து இளம் இயக்குனர்களுடன் படம் நடிக்க ஆசைப்படுவது தயாரிப்பாளர்களுக்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது.

விஜய்யின் பொறுமையை சோதிக்கும் முருகதாஸ்.. தளபதி65 படக்கதையில் சொதப்பல்! -  Cinemapettai

அதன்படி, தளபதி 65 படம் முதலில் முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாவதாக இருந்தது. ஆனால், முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்பதால், இந்த படத்தில் மூன்று முறை கதையில் மாற்றம் செய்ய சொல்லியும், இயக்குனர் முருகதாஸ் மாற்றாமல் இருந்ததால் இந்த படத்தை வேண்டாமென விஜய் ஒதுக்கிவிட்டார்.

பின்னர், விஜய், இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். மேலும், இவரின் 66வது படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்க இருக்கிறார் என சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த படத்திற்கு முருகதாஸ் முதலில் சரியாக இருப்பார் என தயாரிப்பாளர்கள் கூறியபோது, முருகதாசுக்கு இப்போதைக்கு பட வாய்ப்பு கொடுக்கும் எண்ணம் இல்லை என விஜய் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |