சென்னை அண்ணாநகரில் உள்ள நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்த இருவர் 5 சவரன் செயினை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சென்னை அண்ணாநகர் பகுதியை அடுத்த அருணா நகர் இரண்டாவது தெருவில் உள்ள கணேஷ் என்கின்ற நகைக்கடையில் நகை வாங்குவது தொடர்பாக ஈடுபட்ட நபர்கள் ஜெயின் வாங்குவது போல ஒவ்வொரு மாடல்களாக கையில் எடுத்து தருமாறு அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் பேச்சுக் கொடுத்து அவர்களின் கவனத்தைத் திசைதிருப்பி 5 சவரன் நகையை அசால்டாக உள்ளங்கையில் மறைத்து வைத்து கொண்டனர்.
பின் வெகு மணி நேரமாக செயின் வகைகளைப் பார்த்தும் எதுவும் வாங்காமல் சென்றதால் நகைகளை ராக்கில் ஊழியர்கள் அடுக்கினர். அப்போது ஐந்து சவரன் செயின் காணாமல் போயிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின் கடை சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருவரும் செயினை திருடி செல்வது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பெயரில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பிரேம்குமார் அவருடன் இருந்த மற்றொரு நபரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.