Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

சூட்கேஸில் இருந்த குழந்தை…. பொதுமக்கள் அதிர்ச்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

சூட்கேஸில் வைத்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை ஒன்றை கால்வாயில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தொப்பூர் கிராமத்தில் ஓடை கால்வாய் அருகாமையில் மூடப்பட்ட சூட்கேஸ் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸை அவ்வழியாக சென்றவர்கள் திறந்து பார்த்ததில் இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தை உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதில் கூடுதலாக நைட்டி, டவல் போன்றவைகள் இருந்துள்ளது. இது பற்றி கிராம நிர்வாக அலுவலர் சுமனுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராம நிர்வாக அலுவலர் குழந்தையை பத்திரமாக கைப்பற்றி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார்.

இதனையடுத்து குழந்தையின் கால் மற்றும் கையின் ரேகைகளை செவிலியர்கள் பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட சைல்டு லைனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில் மருத்துவமனைக்கு விரைந்து வந்த சைல்டு லைன் குழுவினரிடம் குழந்தையை ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் சுமன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சூட்கேஸில் வைத்து குழந்தையை கால்வாயில் வீசி சென்றவர்கள் யார் மற்றும் கள்ளக்காதலில் பிறந்ததால் வீசி சென்றார்களா இல்லை வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என பல கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |