ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவிக்கு பணி நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், நிதித்துறையில், ஆராய்ச்சி உதவியாளர் பணியில் 6 இடங்களை நிரப்ப அடுத்த ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி போட்டி தேர்வு நடத்தப்படும். அதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. நவம்பர் 19ம் தேதிக்குள் விண்ணப்பம் பதிவை முடிக்க வேண்டும்.
இந்தப் பதவிக்கு பொருளியல், வணிக நிர்வாகம், பொருள் அளவியல், புள்ளியியல், கணிதம், சமூகப்பணி, சமூகவியல், மானுடவியல், பொது நிர்வாகம், வேளாண் பொருளியல் உள்ளிட்ட ஏதாவது ஒரு பாடப்பிரிவில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதனைப்போலவே சுகாதாரத் துறையில், தடுப்பூசி கிடந்து காப்பாளர் பதவியில் 30 காலி பணியிடங்கள், வட்டார சுகாதார புள்ளியியலாளர் பதவியில் 161, புள்ளியியல் உதவியாளர் பதவியில் 2 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான போட்டித் தேர்வு ஜனவரி 9ஆம் தேதி நடத்தப்படும். ஏற்கனவே இதற்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. நவம்பர் 19 ஆம் தேதிக்குள் பதிவை முடிக்க வேண்டுமென்று தெரிவித்துள்ளது.