Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

சம்சாரத்தை மின்சாரம் வைத்து கொல்ல முயன்ற கணவர்…….. மத்திய சிறையில் அடைப்பு….!!

நாமக்கல்லில் மனைவியை மின்சாரம் வைத்து கொலை செய்ய முயன்ற கணவன் மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.

கரூர் மாவட்டத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் பெங்களூருவில் உடன் பணிபுரிந்த நாமக்கல் ராமா புரத்தைச் சேர்ந்த ரூபிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அப்போது ரூபிக்கா தந்தைக்கு திருமண செலவுகளுக்காக சிவப்பிரகாசம் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த பணத்தை சிவப்பிரகாசம் திருப்பி கேட்ட பொழுது மாமனாருக்கும் மருமகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 7ஆம் தேதியன்று அதிகரித்த இந்த பிரச்சனையில் இதய நோயாளியான ரூபிகாவின் தந்தையை சிவப்பிரகாசம் கீழே தள்ளி விட்டதாகவும் அதன் பிறகு அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்து விட்டதாகவும் புகார் அளிக்கப் பட வழக்கு பதிவு செய்த நாமக்கல் காவல்துறையினர்  சிவப்பிரகாசத்தை கைது செய்தனர்.

Related image

இதனையடுத்து தனது ஒன்றரை வயது குழந்தையுடன் தாய் வீட்டிற்கு சென்றாள் ரூபிகா. ஆறு மாதங்கள் கழித்து சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த சிவப்பிரகாசம் தனது மனைவியையும் குழந்தையையும் பார்க்க சென்றுள்ளார். ஆனால் சிவப்பிரகாசத்துடன் குடும்பம் நடத்த வர மறுத்த ரூபிகா குழந்தையையும் பார்க்க அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிசிஇ பட்டதாரியான சிவப்பிரகாசம் கடந்த ஜூன் 23-ம் தேதியன்று மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டதாக தகவல் தெரிய வந்துள்ளது.

 

அதே போல் வீட்டிற்கு அருகில் இருந்த மின் கம்பத்தில் இருந்து இரண்டு வயர்களை 5 அடி நீள கம்புடன் இணைத்து இரும்பு கதவின் மீது போட்டதாகவும் அப்போது ரூபிகா தாயார் வளர்மதி அதை பார்த்து விட்டதாகவும் கூறப்படுகிறது.சிவப்பிரகாசம் திட்டத்தை அறிந்து கொண்ட வளர்மதி இது தொடர்பாக நாமக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிவப்பிரகாசம் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் சிவப்பிரகாசம் நாமக்கல் பேருந்து நிலையத்தில் இருப்பதாக தனிப்படைக்கு  ரகசிய தகவல் அளிக்கப்பட்டது. அங்கு சென்ற காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |