ஆயுர்வேத சிகிச்சை என்றாலே அனைவரும் முன்பெல்லாம் கேரளாவிற்கு தான் சென்று வருவார்கள். ஆனால் தற்போது தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இந்த சிகிச்சை முறை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவையில் உள்ள பிரபல ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் பன்னீர்செல்வம் ஆயுர்வேத சிகிச்சைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து முதலில் அவருக்கு உணவு கட்டுப்பாடு சொல்லப்பட்டுள்ளது. கடந்த 18ஆம் தேதி சென்ற அவருக்கு 19ஆம் தேதி முதல் சிகிச்சை தொடங்கி இருப்பதாகவும் ஒரு வாரத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதுவரை கோவையில் இருக்கும் அந்த ஆயுர்வேத சிகிச்சை மையத்திற்கு ஓபிஎஸ் ஏழு முறை சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதன் காரணமாக தான் அதிமுக தலைவர் ஆளுநர் என்.ஆர் ரவியை சந்தித்தபோது ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் மூலிகைக் குளியல், எண்ணெய் குளியல் போன்ற சிகிச்சை ஓபிஎஸ்க்கு அளிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி காய்கறிகளால் செய்யப்பட்ட கஞ்சியும், சூப்பும் உணவாக வழங்கப்படுகிறது.