பூஜை செய்தால் பணம் இரட்டிப்பாகும் என்பதை நம்பி இருபத்தி ஒன்பது லட்சத்தை இழந்துள்ளனர் தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தம்பதிகள்.
தெலுங்கானாவில் பூஜை மூலம் பணம் இரட்டிப்பாகும் என்று கூறி மோசடியில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த சுக்ரீவ்- சங்கீதா என்ற தம்பதிகள் பணம் வைத்திருப்பவர்களை குறிவைத்து அவருடன் நட்பாக பழகி ஒரு சிறப்பு பூஜை மூலம் பணத்தை இரட்டிப்பாக்க முடியும் என்பதை நம்ப வைத்துள்ளனர். இதை நம்பிய முகமது சாதிக் என்ற நபர் கடந்த மாதம் 50 ஆயிரம் பணத்தை அவரிடம் கொடுத்துள்ளார். அவர் ஹோமத்தில் வைத்து பூஜை செய்து பிறகு 80 ஆயிரம் பணத்தை அவருக்கு எடுத்துக் கொடுத்துள்ளார்.
இரண்டு முறை இதுபோன்று செய்து அவரை நம்ப வைத்துள்ளார். பின்னர் இந்த மோசடி தம்பதிகள் உன் வீட்டை விற்று பணம் கொடுத்தால் அதை இரட்டிப்பாக மாற்றித் தருகிறேன் என்று ஆசைவார்த்தை கூறவே, இதையும் நம்பிய முகமது தனது வீட்டை 29 லட்சத்திற்கு விற்று அவரிடம் கொடுத்துள்ளார். அவர்களும் தான் இதை 40 லட்சமாக மாற்றி தருவதாக நம்பிக்கை கொடுத்துள்ளனர். அவரின் வார்த்தையை நம்பிய முகமது ஷாரூக் அந்த பணத்தை ஒரு வீட்டின் அறையில் வைத்து விட்டு சென்றுள்ளார். இரண்டு நாட்கள் கழித்து அந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. பின்னர் தான் ஏமாந்ததை உணர்ந்த முகமது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் தனிப்படை அமைத்து போலீசார் இந்த மோசடி தம்பதியை கைது செய்தனர்.