4-வது மனைவி இறந்து போனதால் தனியாக தவித்த தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள சென்னாக்குட்டை பகுதியில் கூலித்தொழிலாளி சுப்பிரமணி வசித்து வந்தார். இவர் இளம் வயதினில் தொடர்ந்து 3 பெண்களை திருமணம் செய்தார். இதனையடுத்து குடும்ப பிரச்சனை காரணமாக அவர்கள் சுப்பிரமணியை விட்டு பிரிந்து சென்று விட்டனர். அதன்பின் 3 மனைவிகளும் தன்னுடன் இல்லாததால் சுப்பிரமணி 4-வதாக பழனியம்மாள் என்ற பெண்ணை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லாததால் இருவர் மட்டும் தனியாக வசித்து வந்தனர். கடந்த 3 மாதங்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்த பழனியம்மாள் பரிதாபமாக உயிரிழந்து விட்டார் .
இதனால் மனமுடைந்த சுப்பிரமணி தனது வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது “ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்தும் சுப்பிரமணியனுக்கு குழந்தைகள் இல்லை. அதன்பின் 4-வதாக அவருடன் வாழ்ந்து வந்த மனைவியும் இறந்து போய் விட்டார். இதனால் மனமுடைந்து தனிமையில் தவித்து வந்த சுப்பிரமணி தற்கொலை செய்து கொண்டது” காவல்துறையினருக்கு தெரியவந்தது. இதனைதொடர்ந்து சுப்பிரமணியனின் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.