Categories
கிரிக்கெட் விளையாட்டு

T20 World Cup: ஓமனை வீழ்த்தியது ஸ்காட்லாந்து ….! சூப்பர் 12 சுற்றுக்கு  முன்னேறி அசத்தல் ….!!!

டி20 உலகக்கோப்பை தொடரில் ஓமன்  அணிக்கெதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு  முன்னேறி உள்ளது.

7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று நடந்த ‘பி ‘பிரிவு ஆட்டத்தில் ஓமன்-ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற ஓமன் அணி பேட்டிங் தேர்வு செய்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ஓமன் அணி 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 122 ரன்னில் சுருண்டது .இதில் அதிகபட்சமாக லியாஸ் 37 ரன்னும், மசூத் 34 ரன்னும் குவித்தனர்.

ஸ்காட்லாந்து அணி தரப்பில் டேவி 3 விக்கெட் கைப்பற்றினார் .இதன்பிறகு 123 ரன்களை  வெற்றி இலக்காக கொண்டு ஸ்காட்லாந்து அணி களமிறங்கியது. இறுதியாக 17 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் குவித்து ஸ்காட்லாந்து அணி வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக கைல் கோட்சர் 41 ரன்னும் ,பெர்ரிங்டன் 31 ரன்னும், மேத்யூ கிராஸ் 26 ரன்னும் எடுத்தனர் .இந்த வெற்றியின் மூலம்  ஸ்காட்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு  முன்னேறி உள்ளது.

Categories

Tech |