தமிழ் திரையுலகில் நடிப்புக்கென்று தனி முத்திரை பதித்த உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிவருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் என அனைவரும் தங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.
அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் கமலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், அவர் தனது வழக்கமான பாணியில் இல்லாமல் கமலின் ஸ்டைலிலே ஒரு கவிதை சொல்லி தனது வாழ்த்தை பதிவிட்டிருக்கிறார். மேலும் #HBDKamalHaasan Anna என இறுதியாக அதில் பதிவிட்டிருந்தார்.
சினிமா என்னும் துறவை
துரத்தி சிறகு செதுக்கிய பறவை
உங்கள் அறுபத்து ஐந்து அகவை
எமக்கு விஸ்வரூப உவகை.
களிப்புற்றோம் காணீர்!
காலம் இருக்கட்டும்
உம் பெயர் சொல்லி!@ikamalhaasan சார் உங்களுக்கு உங்கள் தொனியில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறுவதில் மகிழ்ச்சி #HBDKamalHaasan Anna pic.twitter.com/sdcBhB7jby— Harbhajan Turbanator (@harbhajan_singh) November 7, 2019