முகக் கவசம் தொடர்ந்து அணிய வேண்டும் என்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
நேற்று மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை மந்திரி அனுராக் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது: சில நாடுகள் 75 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போட்டிருந்தால் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்திருந்தது. அவர்களின் விருப்பத்தின் பெயரில் மூலம் முக கவசம் அணிந்து கொள்ளலாம் என்று முடிவு எடுத்திருப்பது குறித்து நிபுணர்கள் கேள்வி கேட்டனர்.
அதற்கு அவர் ‘தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் முக கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றின் மூலமாக மட்டும்தான் வைரஸ் பரவுவதை தடுக்க முடியும். இந்த விஷயத்தில் மருத்துவ நிபுணர்கள் தான் வழிகாட்டி வருகின்றன. முகம் எப்போது அணிய வேண்டியது இல்லை என்பது குறித்தும் மருத்துவ நிபுணர்கள் கூறுவார்கள். அது வரை நாம் தொடர்ந்து முக கவசம் அணிந்து கொண்டிருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்தார்.