Categories
உலக செய்திகள்

‘மகாராணியார் நலமாக உள்ளார்’…. அரண்மனை அளித்துள்ள விளக்கம்…. வெளிவந்த தகவல்கள்….!!

மகாராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அரண்மனை விளக்கம் அளித்துள்ளது.

இங்கிலாந்து மகாராணியார் இரண்டாம் எலிசபெத் அவர்கள் மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து பக்கிங்ஹாம் அரண்மனை தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் “மகாராணியார் எலிசபெத் பொதுப் பணிகளில் இருந்து சில தினங்களுக்கு ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

மேலும் கடந்த புதன்கிழமை அன்று பிற்பகல் வழக்கமான பரிசோதனைகளுக்காக மகாராணியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதனையடுத்து நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து வின்ஸ்டர் கோட்டைக்கு திரும்பியுள்ளார். தற்போது அவர் நல்ல மனநிலையுடன் இருக்கிறார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வடக்கு அயர்லாந்து பயணமானது எதிர்பாரதவிதமாக ரத்து செய்யப்பட்டதால் மகாராணியார் ஏமாற்றமடைந்தார் என்றும் கூறப்படுகிறது.

Categories

Tech |