கேரளாவில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் கடந்த 12-ம் தேதி முதல் தொடர் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்த வண்ணம் உள்ளன. அதோடு மட்டுமல்லாமல் கோட்டயம், இடுக்கி, கோழிக்கோடு மாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த இயற்கை சீற்றத்தால் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நான்கு பேரை கண்டுபிடிக்க இயலவில்லை. இந்த இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 400க்கு மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு அதில் 29 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மத்திய அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய நீர்சுழற்சி காரணமாக வருகிற 25-ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காரணமாக பத்தினம்திட்டா, கோட்டயம் ,எர்ணாகுளம், திருச்சூர் உட்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது மேலும் இந்த பகுதிகளில் மீட்பு துறையினர் உஷார் நிலையில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர்.