Categories
தேசிய செய்திகள்

அந்த மனசு தான் சார் கடவுள்… “தன் உயிரையும் துச்சமாக்கி 50 வயது பெண்ணை காப்பாற்றிய பெண் போலீஸ்”…. குவியும் பாராட்டு…!!!

மும்பையில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற போது தவறி விழுந்த பெண் பயணி ஒருவரை பெண் ரயில்வே போலீஸ் காப்பாற்றிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

மும்பையில் உள்ள சாண்ட்ஹார்ஸ் ரோடு ரயில் நிலையத்தில் நேற்று பயணிகள் ரயில் ஒன்று புறப்பட்டது. அப்போது சுமார் 50 வயது நிரம்பிய பெண் பயணி ஒருவர் ரயில் கிளம்பிய பிறகு அதில் ஏற முயற்சித்தார். இதனால் அவர் ரயிலுக்கும் நடைமேடை க்கும் இடையில் தவறிவிழுந்து சிக்கிக்கொண்டார். தொடர்ந்து ரயில் வேகமாக சென்றதால் அந்த பெண் பயணியும் இழுத்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட ஸ்வப்னா என்ற ரயில்வே போலீஸ் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்திற்கு இடையே சிக்கிய அப்பெண்ணை பத்திரமாக மீட்டெடுத்தார்.

இந்த சம்பவம் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது. இந்த கண்காணிப்பு கேமரா பதிவை ரயில்வே நிர்வாகம் நேற்று வெளியிட்டது. அப்போது 50 வயது நிரம்பிய பெண்ணின் உயிருக்காக தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய பெண் போலீஸ் ஸ்வப்னாவுக்கு ரயில்வே நிர்வாகம் பாராட்டு தெரிவித்தது.

Categories

Tech |