குடும்ப தகராறில் கணவன் மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள சந்தைப்பேட்டை பகுதியில் கார்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கார்த்திக் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரியாவின் அண்ணனான தேவராஜை கார்த்திக் செல்போன் மூலம் அழைத்துள்ளார். அப்போது உனது தங்கை தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறுகிறார் என்று கூறி பிரியாவிடம் செல்போனை கொடுத்துள்ளார். அதற்கு ஏன் என் அண்ணனுக்கு போன் செய்தாய் என கூறி பிரியா மீண்டும் கார்த்திக்கிடம் தகராறு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அதிகாலை 6.30 மணிக்கு பிரியா தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்ததும் மன உளைச்சலில் இருந்த கார்த்திக் 7:30 மணிக்கு அப்பகுதியில் இருக்கும் ஏரிக் கரைக்கு சென்று அங்கு கிடந்த பாட்டிலை எடுத்து கழுத்தை அறுத்து கொண்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் கணவன் மனைவி இருவரின் சடலங்களையும் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.