Categories
தேசிய செய்திகள்

‘இந்திய பிரதமரை சந்திக்க விரும்பும் உலகின் பெரும் பணக்காரர்’… காரணம் என்ன தெரியுமா….??

இந்திய பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் கோரிக்கை வைத்துள்ளார்.

மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவரான எலன் மாஸ்க் உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவர் இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான வரியை குறைக்குமாறு பிரதமர் அலுவலகத்தில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார். இது குறித்து பிரதமர் மோடியை சந்தித்து பேசுவதற்காக ஒரு முறை வாய்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த நிறுவனம் இந்திய சந்தைக்குள் நுழைவதற்கு முன்பாகவே மின்சார வாகனங்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்நிறுவனம் முதல்கட்டமாக கார்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |