தமிழகத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தடுப்பூசி முகாம்களை அதிகப்படுத்திய தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடு தளர்வுகள் இந்த மாதம் முடியும் வரை அமலில் இருக்கும். அதன் பின்னர் நவம்பர் 1ஆம் தேதி முதல் என்னென்ன பணிகள் தொடங்கப்படும் என்பது பற்றி கடந்த வாரம் அறிவிப்பு வெளியாக உ120…..
ள்ளது. இதையடுத்து தீபாவளி பண்டிகையையொட்டி புதிய திரைப்படங்கள் வெளிவர இருப்பதால் திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதிக்கும் என்ற கேள்வி எழும்பியுள்ளது.
இதைப்போன்று மதுபான பார்களை திறப்பது பற்றி அரசு அறிவிப்பை வெளியிடலாம் என்று கூறப்படுகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நகைக்கடை, ஜவுளிக்கடை, பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகிய இடங்களில் மக்கள் கூட்டம் குவியும்.
இதோடு திரையரங்குகளை முழுவதுமாக திறக்கப்பட்டாலும், மதுபான பார்களுக்கு அனுமதி கொடுத்தாலும், சிக்கல்கள் ஏற்படும். இதுபற்றிய ஆலோசனை கூட்டம் நாளை 11.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும். அந்தக் கூட்டத்தில் மா. சுப்பிரமணியன், தலைமைச் செயலாளர், முனைவர் வெ. இறையன்பு கலந்து கொள்கின்றனர்.