Categories
தேசிய செய்திகள்

257 தினங்களில் 100 கோடி தடுப்பூசிகள்…. உலக அரங்கில் இந்தியாவிற்கு கிடைத்த சர்ப்ரைஸ்… பெருமிதம் கொண்ட பிரதமர் மோடி….!!!

கொரோனாவிற்கு எதிராக 100 கோடி தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்தி இந்தியா சாதனை படைத்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரிதும் குறைந்துள்ளது. இதற்கு முதன்மையான காரணம் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதே ஆகும். கடந்த ஒன்பது மாதங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி சீனாவிற்கு அடுத்தபடியாக உலகரங்கில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனால் உலக சுகாதார துறையினருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது ‘Made In India’ எனும் திட்டத்தின் கீழ் எளிமையான மனிதர்களின் தயாரிப்புகளையும் வாங்குவதற்கான ஆர்வத்தினை வளர்த்தோம்.

மேலும் விவசாயம், சுற்றுலா, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறோம். கொரோனா என்கிற பெரும் துயரத்தை எதிர்கொள்ளும் வலிமையை பெற்றுள்ளோம். கொரோனா தொற்றினால் நாட்டு மக்கள் துவண்டு விடாமல் இருப்பதற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை முன் எடுத்துள்ளோம். கொரோனா தடுப்பூசி திட்டத்தினை கோவின் இணையதளமானது பொதுமக்களிடம் மிகவும் எளிமையாக கொண்டு சேர்த்தது. நம் நாட்டில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி மக்களை பாதுகாத்துள்ளது. ஆகவே இனிவரும் காலங்களில் பாதுகாப்பை உறுதி செய்யும் என்று நம்பப்படுகிறது.

இந்தியாவின் தடுப்பு திட்டம் முற்றிலும் அறிவியல் அடிப்படையில் வகுக்கப்பட்டது ஆகும். உலகளவில் மருந்து தயாரிப்பதில் இந்தியாவிற்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி கடைக் கோடி மக்களுக்கு தடுப்பூசி போடுவதை அரசு உறுதி செய்தது. கொரோனா நெருக்கடி காலத்தில் நாட்டு மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. இதனையடுத்து தடுப்பூசிகள் போட தொடங்கியபோது முக்கியஸ்தர்களுக்கு முன்னுரிமை என்ற விஷயம் தவிர்க்கப்பட்டது. எனவே அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற திட்டத்தைக் கொண்டு வந்து இந்த சாதனையை எட்டி இருக்கின்றோம்.

இவ்வாறு அனைவருடைய கேள்விகளுக்கும் பதிலளிக்க கூடிய வகையில் 100 கோடி தடுப்பூசி டோஸ் போட்டு சாதனையை படைத்துள்ளோம். இதில் உலக அளவில் தடுப்பூசிகள் செலுத்த தொடங்கியபோது இந்தியா குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டது. அதாவது பெரும் மக்கள் தொகை உள்ள இந்தியா தடுப்பூசிகளை எவ்வாறு பெறுவார்கள் மற்றும் செலுத்துவார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் புதிய இந்தியாவின் விடா முயற்சி, நம்பிக்கைக்கு கிடைத்த பரிசாக தான் இது கருதப்படுகிறது. இந்தியாவின் தடுப்பூசி சட்டம் உலக அளவில் ஒப்பிட்டு பார்க்க படுகிறது. 257 தினங்களில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி இந்தியா கடும் இலக்கை எட்டி இருக்கிறது.

இதனைத்தொடர்ந்து பிரதமர் மோடி தனது உரையில் கூறியதாவது “நேற்றுக்காலை 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலக்கை எட்டி இந்தியா சாதனை படைத்துள்ளது. இதனையொட்டி உலக தலைவர்கள் பலரும் இந்தியாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். எனவே  24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 15,786 நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 231 பேர் கொரோனாவால் உயிரிழந்து இருக்கின்றனர். கொரோனா பாதிக்கப்பட்டவர்களாக 1,75,745 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிரதமர் மோடி இன்று தன் நாட்டு மக்களுக்கு உரையாற்றி உள்ளார். அப்போது 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் இலக்கை எட்டியது குறித்து சிறப்புரை ஆற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

Categories

Tech |