Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஊருக்கு சென்ற பெண்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் வலைவீச்சு…!!

பணம் மற்றும் நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா நகரில் சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி உள்ளார். இந்த பெண் தொழிலாளர் நல வாரியத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அலுவலக கூட்டத்தில் பங்கேற்பதற்காக கலைச்செல்வி சென்னைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு கலைச்செல்வி அதிர்ச்சி அடைந்தார்.

அதன் பின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 17 ஆயிரம் ரூபாய் பணம் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கலைச்செல்வி காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |