முத்துராமலிங்கதேவரின் குரு பூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதி தரக் கோரி மனு கொடுத்த அதிமுகவினரின் பொறுப்பு பறிக்கப்பட்டுள்ளது..
ராமநாதர் மாவட்டம் கமுதி அருகே இருக்கும் பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவரின் 114வது ஜெயந்தி விழாவும், 59ஆவது குருபூஜை விழாவும் அக்டோபர் 30ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட இருக்கிறது.. இந்த விழாவில் பங்கேற்பதற்கு பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருவது வழக்கம்.. ஆனால் தற்போது கொரோனா காலத்தில் அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.. அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் குரு பூஜையில் பங்கேற்க சசிகலாவிற்கு அனுமதி தரக் கோரி அதிமுகவின் ராமநாதபுரம் இளைஞரணி இணை செயலாளர், மாணவரணி செயலர் ஆகியோர் போலீசில் மனு கொடுத்தனர்.
இந்நிலையில் ராமநாதபுரம் இளைஞரணி இணை செயலாளர் A.சரவணன், மாணவர் அணி செயலாளர் S.முத்துராமலிங்கம் ஆகிய இருவர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்..
கழக ஒருங்கிணைப்பாளர் திரு. ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் முக்கிய அறிவிப்பு. pic.twitter.com/t87VLwnS1c
— AIADMK (@AIADMKOfficial) October 22, 2021