ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் போஸ்டர் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியிடப்பட்டுள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிய படம் தர்பார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகியிருக்கிறது. தமிழில் முன்னனி நடிகர் கமல்ஹாசன் , தெலுங்கில் மகேஷ்பாபு , மலையாளத்தில் மோகன்லால் , இந்தியில் சல்மான்கான் என ஒரு நட்சத்திர பட்டாளமே இணைந்து வெளியிட்டிருக்கிறது.AR. முருகதாஸ் ரஜினி கூட்டணி முதல் முறையாக இணைந்து இருப்பதாலும் , ரஜினிகாந்த் நீண்ட இடைவேளைக்கு பிறகு காவல்துறை அதிகாரியாக நடித்து இருப்பதாலும் இந்த படத்திற்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு மிகப்பெரிய வரவேற்பு உருவாக்கி இருந்தது.
அந்த எதிர்பார்ப்பை கொஞ்சமும் சிதைக்காமல் , இன்னும் சொல்லப்போனால் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் இந்த மோஷன் போஸ்டர் ஆனது தற்போது வெளியாகி இருக்கிறது.இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வரும் என்று சொல்லி திட்டமிட்டபடி படப்பிடிப்பை உரிய காலத்தில் முடித்து , தற்போது வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. அடுத்த ஆண்டு ஜனவரி 10 ஆம் தேதி பொங்கல் விருந்தாக இந்த படம் திரைக்கு வரவிருக்கிறது.
மேலும் நடிகர் ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12ஆம் தேதி இந்த படத்தின் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட் வெளியாக இருப்பதால் ரஜினி ரசிகர்களுக்கு அடுத்தடுத்த விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் ரஜினிக்கு தமிழகம் தாண்டி இந்தி , மலையாளம் , தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் மிகப் பெரிய மார்க்கெட் இருக்கின்றது. அதை குறிவைத்து இந்த படம் ஒரே நாளில் ஜனவரி 10ஆம் தேதி இந்த நான்கு மொழிகளிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ரஜினியின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு மிகப்பெரிய அளவில் இந்த படத்தின் வெளியீடு இருக்கும் என கணிக்கப்படுகிறது. பத்து நாள் தொடர் விடுமுறையை குறிவைத்து ஜனவரி 10ஆம் தேதி இந்த படமானது வெளியாக இருக்கிறது. போன பொங்கலுக்கு பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்த பொங்கலுக்கு_க்கும் ரஜினி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கலாம்.