இந்தியாவில் 100 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து டுவிட்டரில் தனது டிபி மூலம் பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய மக்கள் அனைவரும் 100 கோடி கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டதை தொடர்ந்து உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவை பாராட்டி வருகின்றன. இந்த வரலாறு காணாத சாதனை எட்டுவதற்கு உதவிய அனைத்து மக்களுக்கும் நன்றி என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் டிபி எனப்படும் சுயவிவரப் படத்தை மாற்றியுள்ளார். அதில் நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள மோடி ‘கங்கிராட்ஸ் இந்தியா’ என குறிப்பிட்டு தடுப்பூசியின் டிபி படத்தையும் வைத்துள்ளார். இது மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.