Categories
மாநில செய்திகள்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்துவது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு அறிவித்தது. அதற்கு பலரும் ஆன்லைன் விண்ணப்பம் செய்து தேர்விற்கு தயாராக இருந்தனர். ஆனால் கொரானா ஊரடங்கு காரணமாக தேர்வு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிக்கு 1.38 லட்சம் பேர் விண்ணப்பம் செய்து உள்ளனர். இவர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இதில் தேர்வு எழுதப்படவேண்டிய மாவட்டம் மட்டுமே குறிப்பிட்டு இருக்கும். இதையடுத்து தேர்விற்கு 3 நாட்களுக்கு முன் வெளியிடப்படும் மீண்டும் ஒரு ஹால் டிக்கெட்டி அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பாலிடெக்னிக் விரிவுரையாளர்களுக்கான கணினி வழித் தேர்வு வருகின்ற அக்டோபர் 28, 29, 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மேலும் ஹால் டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்திற்கு அதில் கூறப்பட்டுள்ள ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டையை சரியான நேரத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். காலை தேர்வாக இருந்தால் 7.30 மணிக்கு மற்றும் மதியம் தேர்வு இருந்தால் 12.30 மணிக்கும் தேர்வு மையத்திற்கு கண்டிப்பாக வர வேண்டும். மேலும் தாமதமாக வரும் விண்ணப்பதாரர்களுக்கு தேர்வு மையத்திற்குள் அனுமதி அளிக்கப்படாது. இதையடுத்து பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்விற்காக தயாராகி வருபவர்கள் பயிற்சி தேர்வு எழுத விரும்பினால் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தங்கள் யூசர் நேம் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து எழுதிக் கொள்ளலாம். இதில் இடம்பெற்றுள்ள வினாக்கள் பயிற்சிக்காக மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |