Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

முன்விரோதம் காரணமாக…. குண்டு வீசிய 2 வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

முன்விரோதம் காரணமாக தொழிலாளி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கஸ்தூரிரெங்கபுரம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் அதே ஊரில் வசிக்கும் பட்டுவேல் என்பவருடன் சேர்ந்து தசரா திருவிழா தொடர்பாக செட் அமைத்து வேடம் அணிந்து காணிக்கை வசூல் செய்தனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு 2 பேருக்கும் இடையே வசூலான ரூபாய் கணக்கு பிரிப்பது குறித்து தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து 2 பேரையும் ஊர்மக்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் 2 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பட்டுவேல், அவரது நண்பரான அதே ஊரில் வசிக்கும் பட்டுராஜா என்பவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் ஆறுமுகம் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கு தயார் செய்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டை ஆறுமுகம் வீட்டின் மீது வீசினர்.

இதில் குண்டு வெடித்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்ததும் அங்கு பாட்டிலில் இருந்த பெட்ரோல் சிதறி தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து அவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. அதன்பின் பட்டுவேல் மற்றும் பட்டு ராஜா ஆகிய இருவரும் ஆறுமுகத்திற்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்து ஆறுமுகம் திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய பட்டுவேல், பட்டு ராஜா ஆகியோரை மடக்கிப் பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |