Categories
தேனி மாவட்ட செய்திகள்

சிறுமி பாலியல் வழக்கு… கூலித்தொழிலாளி போக்சோவில் கைது… நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளத்தை அடுத்துள்ள பங்களாபட்டியில் மதன்குமார் என்பவர் என்ற இளைஞர் வாசித்துள்ளார். கூலித்தொழிலாளி இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் மதன்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த இரண்டு வருடங்களாக தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று வழக்கிற்கான இறுதி விசாரணை நடைபெற்றுள்ளது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கடேசன் சிறுமிக்கு பாலியல் ரீதியான துன்புறுத்திய மதன்குமாருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 2,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் அடிப்படையில் காவல்துறையினர் மதன்குமாரை கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |