அரசு ஊழியர் சங்கத்தினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் திடீரென போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டமானது மாவட்ட தலைவரான லியாகத் அலி, செயலாளரான வைரவன் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்த வேண்டும் எனவும், மருத்துவமனைகளில் முன் பணம் பெறுவதை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இந்த போராட்டத்தில் முக்கிய பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.