இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கையில் உள்ள கொழும்பில் ‘நைன்வெல்ஸ்’ என்ற தனியார் மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் 31 வயதான பெண்ணுக்கு ஒரே பிரசவதில் ஆறு குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் மூன்று பெண் குழந்தைகளும் மூன்று ஆண் குழந்தைகளும் பிறந்துள்ளது. குறிப்பாக குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளன.
இந்த பிரசவம் இலங்கையின் மருத்துவ வரலாற்றில் முதன் முறையாக நடந்துள்ளது. மேலும் இதில் 1.6 கிலோகிராம் கொண்ட குழந்தை அதிக எடையுடையது. இதனை தொடர்ந்து 870 கிராமுடன் பிறந்த குழந்தை குறைந்த எடையுடையது என்று கூறப்படுகிறது. தற்பொழுது தாயும் குழந்தைகளும் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.