நடந்து சென்று கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நூர்சாகிபுரம் பகுதியில் சண்முககுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த அக்டோபர் 21 -ஆம் தேதியன்று சண்முககுமார் ராஜபாளையம் செல்லும் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் சண்முககுமாரின் மீது மோதி விபத்து நேர்ந்துள்ளது.
இந்த விபத்தில் சண்முககுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சண்முக குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.