குடும்பத்தகராறு காரணமாக கண்மாயில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடி செல்லும் சாலையில் பங்காருசாமிநாயக்கர் கண்மாய் ஒன்று உள்ளது. இந்நிலையில் அந்த கண்மாயில் மூதாட்டி ஒருவரின் பிணம் மிதப்பதாக அப்பகுதியினர் போடி நகர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் கண்மாயில் மிதந்த மூதாட்டியின் உடலை மீட்டுள்ளனர்.
இதனையடுத்து உடற்கூராவிற்க்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் உயிரிழந்த மூதாட்டி போடி வ.ஊ.சி நகரை சேர்ந்த முத்துலட்சுமி என்பது தெரியவந்துள்ளது. மேலும் குடும்பத்தகராறு காரணமாக மனமுடைந்து கண்மாயில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்துள்ளது.