Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

3 வயது ஆண் குழந்தையை கொலை செய்த பாட்டி…. காரணம் என்ன?…. போலீஸ் வலைவீச்சு….!!!!

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சேரன் நகரில் பாஸ்கரன்- ஐஸ்வர்யா தம்பதியினர் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 3 மாத இரட்டைக் குழந்தைகள் ஆண், பெண் உள்ளது. நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இந்த 2 குழந்தைகளும் பாட்டி சாந்தியுடன் இருந்துள்ளது. தன்னுடைய வீட்டிற்கு திரும்பிய ஐஸ்வர்யா 2 குழந்தைகளும், காயங்களுடன் மயக்க நிலையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே குழந்தைகளை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது மருத்துவர் இரட்டை குழந்தைகளில் ஆண் குழந்தை உயிரிழந்து விட்டதாகவும், பெண் குழந்தையின் கையில் முறிவு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இந்த சம்பவத்தை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் பாட்டி சாந்தி கொலை செய்ததும், பேத்தியை தாக்கியதும், தெரியவந்துள்ளது. மேலும் காணாமல் போன சாந்தியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கடந்த 15 வருடங்களாக சாந்திக்கு மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Categories

Tech |