Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கணவன் – மனைவிக்கு இடையே தகராறு…. பெண்ணுக்கு நடந்த கொடூரம்….. போலீஸ் நடவடிக்கை….!!

குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் கூலித் தொழிலாளியான காளிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள எழுவன்பச்சேரி கிராமத்தில் வசிக்கும் லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் கணவன் – மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததுள்ளது. இதனால் லட்சுமி தனது சொந்த ஊரான எழுவன்பச்சேரி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இதனை அடுத்து காளிச்சாமி லட்சுமியை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வருவது வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமி திடீரென வீட்டில் இருந்து மாயமானார். அவரை பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் உறவினர்கள் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர்.

அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் லட்சுமியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அதன் பின்னர் லட்சுமி தாமாக வந்து காவல் நிலையத்தில் ஆஜர் அடைந்துள்ளார். இதனை அடுத்து காவல்துறையினர் லட்சுமியை சிலநாட்களுக்கு பெற்றோருடன் அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் காளிச்சாமி லட்சுமியை காண்பதற்காக எழுவன்பச்சேரி கிராமத்திலுள்ள கண்மாய் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கணவன் – மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த காளிசாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமியே சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனைப் பார்த்ததும் அருகில் உள்ளவர்கள் லட்சுமி மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு லட்சுமி பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜஸ்மின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காளிசாமி கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |