தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
ரஷ்யாவிலுள்ள ரைசான் பகுதியில் வெடிமருந்து தொழிற்சாலை ஒன்று உள்ளது. இந்த தொழிற்சாலையில் துப்பாக்கி தோட்டாக்கள் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நிலையில் அங்கு வெடி விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 16 பேர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஒருவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குறிப்பாக வெடிமருந்து தொழிற்சாலையில் தீயை அணைக்கும் முயற்சியில் 170 அவசர பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிலும் தொழிற்சாலையில் எவ்வாறு விபத்து ஏற்பட்டது என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளிவரவில்லை.