தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்ததை அடுத்து, படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இந்த மாதம் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கொரோனா மீண்டும் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும் உள்ளதாகவும், அதில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைத்தெருக்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் மீண்டும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.