Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நிலை தடுமாறிய இருசக்கர வாகனம்… பெயிண்டருக்கு ஏற்பட்ட விபரீதம்… போலீஸ் விசாரணை…!!

இருசக்கர வாகனத்தில் கீழே விழுந்து சிகிச்சை பெற்று வந்த பெயிண்டர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் போதுப்பட்டி காலனியில் பிரகாஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான இவர் கடந்த 16ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் வேலகவுண்டம்பட்டிக்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது இளநகர் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் நிலை தடுமாறி கிழே விழுந்துள்ளார்.

இதில் படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் பிரகாஷை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வேலகவுண்டம்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Categories

Tech |