Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. இறந்து கிடந்த ஆண் யானை…. வனத்துறையினரின் தகவல்….!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உயிரிழந்த ஆண் யானையை வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்தனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள பணகுடி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள பூதப்பாண்டி வனத்தில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கஞ்சிபாறை மலைப்பகுதியில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்துள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விசாரணை நடத்தினர். அதில் இறந்த ஆண் யானை 2 நாட்களுக்கு முன்பு இறந்திருக்கலாம் என்றும், அந்த யானைக்கு சுமார் 14 வயது இருக்கலாம் என்றும் தெரிய வந்துள்ளது.

இது குறித்து கால்நடை மருத்துவ துறையினருக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் திலீபன் மற்றும் கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையில் மருத்துவ குழுவினர் யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து அதன் பின் அடக்கம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

Categories

Tech |