Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த கார்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்து வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பாகாயம் பகுதியில் தினேஷ் உள்பட 5 வாலிபர்கள் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா செல்வதற்காக காரில் சென்றுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் அருகாமையில் அவர்கள் 5 பேரும் மது குடித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து காரை நோவா ஓற்றி சென்றதில் மற்றவர்கள் போதையில் அமர்ந்து பயணம் செய்துள்ளனர். அப்போது வலையாம்பட்டு முருகன் கோவில் எதிரே வந்து கொண்டிருந்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்த கார் திடீரென சாலையில் இருக்கும் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் விக்ரம்ராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து படுகாயமடைந்த மற்ற 4 நபர்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |