Categories
தேசிய செய்திகள்

ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி…. இலக்கை கைவிட்டதா மோடி அரசு….? விமர்சிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்….!!

நாடு முழுவதும் 100 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசானது கொண்டாடிக் கொண்டு இருக்கின்றது. ஆனால் இதுவரை 21% மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த ஜனவரி 16 முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தடுப்பூசியானது மருத்துவ ஊழியர்கள் மற்றும் முன்கள ஊழியர்களுடன் தொடங்கப்பட்டது, தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தியுள்ளதாக இந்தியா சாதனை படைத்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், 21% பேருக்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது, மேலும் முதல் தவணையாக 51% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியானது 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி எப்பொழுது வழங்கப்படும் என்று கேள்வியை எழுப்பியுள்ளது.

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் ஆண்டு இறுதிக்குள் தடுப்பு ஊசி செலுத்தப்படும் என்ற இலக்கினை மோடி அரசானது கைவிட்டு உள்ளதாக விமர்சனம் செய்துள்ளார். இருப்பினும் இன்னும் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு தடுப்பு செலுத்தப்படாமல் உள்ளதால் நோய் தொற்று பரவும் ஆபத்து அதிகமாக உள்ளதாக எச்சரிக்கை செய்துள்ளார்.

Categories

Tech |