Categories
அரசியல் மாநில செய்திகள்

அடேங்கப்பா…! 10 சொகுசுக்கார்கள், 21.2 கிலோ தங்கம் பறிமுதல்…. சிக்கிய இளங்கோவன்…!!!

சமீபத்தில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர், மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட முன்னாள் மாஜிக்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிரடியாக சோதனை நடத்தினர். இதனால் திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டி வந்தனர். இந்த நிலையில் நேற்று மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக உள்ள இளங்கோவனின் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நேற்று காலை 6 மணி முதலே அதிரடியாக சோதனையில் இறங்கினர்.

கடந்த அதிமுக ஆட்சியின்போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி 2016ல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது சுமார் 400 கோடி ரூபாய் கூட்டுறவு வங்கியில் மாற்றியதாகவும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடதக்கது. இந்த நிலையில் இளங்கோவனுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 21.2 கிலோ தங்கம், 282 கிலோ வெள்ளி, ரூ.29.72 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் 10 சொகுசு கார்கள், 2 சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |