தைவான் அமைச்சரின் வருகைக்கு பதிலடி கொடுப்பதாக ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு சீன அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இறையாண்மை மிக்க தனி நாடாகதான் தைவான் தன்னை கருதுகிறது. ஆனால் சீனாவோ தங்கள் நாட்டில் இருந்து பிரிந்து சென்ற ஒரு பகுதியாகதான் தைவானை பார்க்கிறது. இதனால் தைவானின் மூத்த அதிகாரிகள் மற்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதால் சீனா கோபம் கொள்கிறது. மேலும் தைவானின் அதிகாரிகளை மற்ற நாடுகள் வரவேற்பதன் மூலம் தைவான் தன்னை தனிநாடு எனக் கூறுவதற்கு ரகசிய ஆதரவு காட்டுவதாகவும் சீனா கருதுகிறது.
இந்த நிலையில் தைவான் நாட்டினுடைய வெளியுறவுதுறை அமைச்சர் ஜோசப் வியூ அடுத்த வாரம் ஐரோப்பிய நாடுகளான ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான Wang Wenbin கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் “நாங்கள் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜோசப் வியூவின் நடவடிக்கைகளை ரகசியமாகவும் கூர்மையாகவும் கவனித்து வருகின்றோம். மேலும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய இறையாண்மையை பாதுகாக்க ஸ்லோவாக்கியா மற்றும் செக் குடியரசுக்கு எதிராக சரியான மற்றும் தேவையான நடவடிக்கைகளை சீன அரசு எடுக்கும்” என Wang Wenbin கூறியுள்ளார்.