Categories
தேசிய செய்திகள்

எம்பியின் காரை அடித்து நொறுக்கிய கும்பல்… திரிபுராவில் பரபரப்பு….!!!

திரிபுராவில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பியின் காரை ஒரு கும்பல் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் எம்பியான சுஷ்மிதா தேவ் திரிபுரா மாநிலத்தில் தேர்தல் வேலைகளை கவனித்து வருகிறார். இதற்காக திரிபுராவின் ஆலோசனை நிறுவனமான ஐபேக் நிறுவன ஊழியர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தி வந்தார். அப்போது திடீரென்று ஒரு கும்பல் சுஷ்மிதாவின் காரை அடித்து நொறுக்கியது. இந்த கலவரத்தில் ஐபேக் நிறுவன ஊழியர்களும் தாக்கப்பட்டன.

இந்த தாக்குதல் தொடர்பாக காவல்நிலையத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி புகார் அளித்துள்ளது. மேலும் சுஷ்மிதா தேவ் மற்றும் திரிணாமுல் காங்கிரசின் தொண்டர்கள் அப்தாலி பஜாரில் கொடூரமாக தாக்கப்பட்டதாகவும், அவர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனை பாஜகவினரே செய்தார்கள் எனவும் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |