Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் இனி…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!!!

தமிழகத்தில் சட்ட மன்றத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடர் போது, பனை மரம் மற்றும் பனை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் குறித்து விவசாயத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் பனை வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் ரேஷன் கடைகளில் விற்க ஏற்பாடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் ரேஷன் கடைகளில் 100 கிராம் முதல் ஒரு கிலோ வரை பனைவெல்லம் விற்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறப்பட்டது.

அதுமட்டுமல்லாமல் பனைவெல்லம் வாங்க கோரி குடும்ப அட்டைதாரர்கள் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து ரேஷன் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவக்கூடிய பல மருத்துவ குணங்கள் நிறைந்த பனைவெல்லத்தை இனிமேல் ரேஷன் கடைகளில் மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |