சென்னையில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக கோவில்களில் உள்ள நகைகளை தங்க கட்டிகளாக மற்றும் திட்டமானது கடந்த 13ம் தேதி முதல் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கோயில்களிலும் உள்ள தங்க நகைகளை உருக்கி கட்டிகளாக மாற்றி எவ்வளவு நகைகள்? அதனுடைய எடை எவ்வளவு? என்பது குறித்த தகவல்கள் பத்திரிக்கை வாயிலாக வெளியிடப்படும்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வரும் நிலையில், கோவில்கள் தரப்பு குறித்து பல்வேறு கோரிக்கைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த பத்து வருடங்களில் தமிழகத்தில் குறைகளை சுட்டிக்காட்டி இருந்தால் பாஜக நடுநிலையான கட்சி என்று கூறி இருக்கலாம். தங்களது இருப்பை காட்டிக்கொள்வதற்காக வேண்டும் என்றே குறை கூறிவருகிறார்கள். ஆதாரமில்லாமல் குறை கூறினால் அதற்கு தகுந்த முறையில் பதிலடி தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.