தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகின்றது. இதற்கிடையே கொரோனா மேலும் குறைந்து வந்த நிலையில், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்தநிலையில் தமிழகத்தில் மழலையர், நர்சரி பள்ளிகளை தற்போதைக்கு திறக்கும் முடிவு இல்லை என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.. தமிழகத்தில் நவம்பர் 1ஆம் தேதி முதல் மழலையர் மற்றும் நர்சரி பள்ளிகள் திறக்கப்படாது என அரசு அறிவித்துள்ளது. மேலும் மழலையர், எல்கேஜி, யுகேஜிக்கு பள்ளிகள் திறப்பது பற்றி பின்னர் முடிவெடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது